Loading...
விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (21.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நவீன சமூகத்தினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Loading...
விவாகரத்துக்கு அழைப்பு விடுக்கும் ஏற்பாடு
நபர் ஒருவர் தனது மனைவி மற்றவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறியும் போது, விவாகரத்துக்கு அழைப்பு விடுக்க இலங்கைச் சட்டங்களில் ஏற்பாடுகள் இல்லை.
எனவே விவாகரத்து தொடர்பான சட்டங்களையும் மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...