இலங்கை மக்களின் ஆயுட்காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இலங்கை வாழ் மக்களின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு பொருளியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் சிசு மரண வீதமும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசு மரண வீதங்கள் உயர்வு
இலங்கை, ஸம்பியா, கானா போன்ற நாடுகளில் சிசு மரண வீங்கள் உயர்வாக காணப்படுவதாகவும் அந்தப் பட்டியலில் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் அந்த நாடுகள் நெருக்கடி நிலைமைகளை எதிர் நோக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் குறிப்பாக இலங்கை, ஸம்பியா, கானா ஆகிய நாடுகள் கூடுதல் அளவில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், குறித்த நாடுகளின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சீனா உரிய கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.