காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறையினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைத்தியசாலையில்சுமார் 100 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சத்திரசிகிச்சை கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலை
வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என்பன பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்த போதிலும் தற்போது 460 மருத்துவர்களே உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பணிக்கு சமுகம் தராத வைத்தியர்கள்
இதேவேளை அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 1300 வைத்தியர்களில் 100 பேர் பணிக்கு சமுகம் தரவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.