சாம்சங் நிறுவனம் புதிய கேல்கஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டது. புதிய கேலக்ஸி M34 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர்களின் கீழ்புறமாக கைரேகை சென்சார் இருப்பது காணப்படுகிறது.
இதே போன்ற செட்டப் கேலக்ஸி M33 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் M34 5ஜி மாடலில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அருகிலேயே ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-M346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் லிஸ்டிங்கில் அம்பலமானது.
இந்த மாடல் SM-E346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேல்கஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் நடைபெறும் என்றும் விலை ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.