Loading...
கொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
குறித்த ரயில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.15 அளவில் தடம்புரண்டதாக தலவாக்கலை ரயில்வே நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
அத்துடன் கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில் ஹட்டன் ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ரயில் நானுஓயா ரயில் நிலையத்திலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கபடவுள்ளது.
மேலும் கொழும்பு முதல் பதுளை வரை நாளாந்தம் 08 ரயில் சேவைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
Loading...