வைத்தியர்களின் கவனயீனத்தினால் சத்திர சிகிக்சையின் மூலம் பிறக்கவிருந்த குழந்தை பலியாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கேகாலை வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்த குழந்தையின் தந்தை சாட்சி வழங்கியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மாவனெல்ல வைத்தியசாலையில் குழந்தை பிறக்கவிருந்தது. மனைவியுடன் தனிப்பட்ட வைத்தியரை சந்திப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு மனைவிக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த நாள் 10ஆம் திகதி காலை மாவனெல்ல வைத்தியசாலையில் மனைவியை அனுமதித்துள்ளார்.
அன்றைய தினம் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், 11 மற்றும் 12ஆம் திகதியும் அதிக வலி காணப்பட்டமையினால் வைத்தியர் அழைக்காமல் இருப்பது ஏன் என வினவிய போது வைத்தியர் விடுமுறையில் சென்றுள்ளதாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சை மேற்கொள்ளாமல் குழந்தையை பெற முடியாது என தனக்கு புரிந்துக் கொள்ளமுடியாத நிலையில் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்களும் வைத்தியர் விடுமுறை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12ஆம் திகதி இரவு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் இல்லை. அதனால் கேகாலை வைத்தியசாலையில் தனது மனைவியை அனுமதிக்குமாறு வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் கர்ப்பிணி தாயாரை கேகாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அதிக தாமதமாகியுள்ளமையினால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து பயனில்லை. அதனால் சாதாரண முறையில் குழந்தையை வெளியே எடுப்போம் என கூறி 13ஆம் திகதி கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
மாவனெல்ல, கம்மானகொட பகுதியை சேர்ந்த 25 வயதான இராணுவ வீரரே குழந்தையின் தந்தையாவார். குழந்தையின் மரணத்திற்கு வைத்தியரின் செயற்பாடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.