நாடாளுமன்றில் கூடுதல் நேரம் உரையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளதாக என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
கூடுதலான நேரம் நாடாளுமன்றில் உரையாற்றுவதனை நோக்கா கொண்டு இவ்வாறு விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளார் என அமைச்சர் அமுனுகம கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கூடுதலாக பேசுவதற்கு நேரம் தேவை என்றால் வாசுதேவ நாணயக்கார மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோரின் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ச உரையாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மரபு நியதிகளுக்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
2021ம் ஆண்டில் தேர்தல் நடைபெறும் எனவும் எவருக்கும் கட்சி அமைக்க உரிமை உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானும் கட்சி அமைத்துள்ளதாகவும் அவ்வாறு ஏனைய தரப்பினரும் கட்சி அமைக்க முடியும் எனவும் அதற்கு எவ்வித தடையையும் அரசாங்கம் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.