ஓமன் தரப்பில் அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஓமன் அணி 20 ரன்கள் எடுப்பதற்க்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜதீந்தர் சிங் – அயன் கான் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை ஹசரங்கா பிரித்தார். ஜதீந்தர் சிங் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.