சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலக நாடுகள் பூரண ஆதரவை தந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடனுதவிக்கான மீளாய்வு செப்டெம்பர் மாதத்தின் நடுப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த உடன்படிக்கைகள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.