Loading...
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
Loading...
மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று(23) அவரது அண்ணன் மகள் தீபா முக்கிய அறிவிப்புகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:- இன்றிலிருந்து எனது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையின் பொருளாளராக செயல்படுவேன்.
இரட்டை இல்லை சின்னத்தை மீட்பதே என் குறிக்கோள். ஜெயலலிதா எந்த தவறும் செய்யவில்லை. மரியாதை நிமித்தமாகவே பன்னீர்செல்வத்தை சந்தித்தேன்.
தற்போதைக்கு பேரவையாக செயல்படும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Loading...