Loading...
எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக ரஷ்ய பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இந்த விடயத்தை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட ரஷ்ய பிரதிநிதிகள் வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் ஜகயர்யனும் தெரிவித்துள்ளார்.
Loading...
பேச்சுவார்த்தைகள்
பேச்சுவார்த்தைகள் இலையுதிர்காலத்தில் ஆரம்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அவர்கள் வந்து அதைத் தொடங்கினால், எல்லாம் சரியான முறையில் இருக்கும் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...