Loading...
பிரித்தானியாவுக்கான இலங்கையின் அடுத்த தூதுவராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் நியமனத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ரோஹித போகொல்லாகமவின் நியமனம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கூறியுள்ளார்.
Loading...
முன்னாள் வெளிவிவகார அமைச்சராக அவர் செய்த பணிகளை கருத்திற்கொண்டு ரோஹித போகொல்லாகம அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இலங்கையின் வெளிவிவகாரச் சேவையில் அனைத்து நிலையங்களையும் நிர்வகிப்பதற்கான அதிகாரிகள் இல்லாததால், முக்கிய பதவிகளுக்கு மற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Loading...