பதுளை ரிதிமாலியெத்த, கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
திரியகம யல்வெல, கினிஹிரிவெல்ல பகுதியைச் சேர்ந்த அசன் சந்தீப என்ற இரண்டரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
36 வயதுடைய தந்தை தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் நெல் வயல்களுக்கு சென்று கொண்டிருந்த போது தெமோதர ஏரி கால்வாய்க்கு அருகில் உள்ள சரிவான பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியின் மீது அமர்ந்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை தூக்கி வீசப்பட்டதாகவும், விபத்தில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த குழந்தையின் தந்தையும் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.