இலங்கையின் தொடருந்து சேவைகளை நவீனமயப்படுத்துவதில் தொடருந்து சாரதிகள் ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடருந்து சேவையை நவீனமயப்படுத்தி, தொடருந்துகளின் வேகம், தொடருந்துகளின் இயக்கம், தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுடனான தொடர்பாடல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை நிறுவ பெரும் தொகையொன்றை தொடருந்து திணைக்களம் செலவழித்துள்ளது.
எனினும் குறித்த கட்டமைப்பை செயற்பாட்டுக்குக் கொண்டுவருவதில் தொடருந்து சாரதிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
பயணிகளுக்கு சிரமம்
இது குறித்து அவ்வாறான கட்டமைப்பு செயற்படுத்தப்படும் பட்சத்தில் தங்கள் தரப்பில் நிகழும் தவறுகள் வெளித் தெரிந்துவிடும் என்ற அச்சம் காரணமாக பல்வேறு நொண்டிச்சாக்குகளை முன்வைத்து அவர்கள் ஒத்துழைப்பு வழங்காமல் தட்டிக்கழிப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தொடருந்துகளின் தாமதம், தொடர்பாடல் சிக்கல் காரணமாக காட்டுப் பிரதேசங்களில் தொடருந்துகளை நிறுத்தி வைத்தல் போன்ற செயற்பாடுகள் காரணமாக பயணிகளே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.