எனது பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதியமைச்சிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் உள்ள விகாரை ஒன்றிக்கு வழிபாட்டிற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இதுமிகப்பெரிய மோசடியாகும். எனவே நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது பற்றி எனது சட்டத்தரணியிடம் சட்ட ஆலோசனைப் பெற்று வருகின்றேன்.
ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் நான் நிதியமைச்சர் இல்லை. நிதியமைச்சின் பதவியை வகித்தவர்கள் எனது பெயரைப் பயன்படுத்தி பாரிய மோசடியை செய்திருக்கின்றனர்.
அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.