Loading...
லண்டன் – பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் ஜீவ்நாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்
கடந்தாண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, நேற்று காலை அவரது பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனை தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ள பெற்றோர், மகனின் உடலை பெற்றுக்கொள்வதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Loading...