இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டாம்மி பியூமான்ட் என்ற வீராங்கனை இரட்டை சதமடித்துள்ளார்.
ஆடவா் ஆஷஸ் தொடா் 5 ஆட்டங்களுடன் நடைபெறும் நிலையில், மகளிா் ஆஷஸ் கிரிக்கெட் ஒரே டெஸ்ட்டாக நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து நாட்டிங்ஹாமில் கடந்த (22.06.2023) ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் அவுஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது.
அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 473 ஒட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 463 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதில் டாம்மி பியூமான்ட் 331 பந்துகளுக்கு 208 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதிலிருந்து இங்கிலாந்து அணிக்காக முதல் இரட்டை சதமடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி 3வது நாளை முடித்து 92 ஒட்டங்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.