இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நேற்று(25) இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் வனிந்து ஹசரங்க புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிகமான 3 விக்கட் பெறுதிகளை தொடர்ச்சியாக எடுத்த இரண்டாவது பந்து வீச்சாளராகவும் முதலாவது சுழல்பந்து வீச்சாளராகவும் வனிந்து ஹசரங்க மாறியிருக்கிறார்.
அதிக விக்கட்கள்
தற்போது இடம்பெற்று வரும் உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் ஆடிய 3 போட்டிகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 24 ஓட்டங்களுக்கு 6 விக்கட்கள், ஓமானுக்கு எதிராக 13 ஓட்டங்களுக்கு 5 விக்கட்கள், அயர்லாந்துக்கு எதிராக 79 ஓட்டங்களுக்கு 5 விக்கட்கள் என இந்தத் தொடரில் அதிக விக்கட்களை வீழ்த்தி பந்து வீச்சாளராகவும் மாயிறிருக்கிறார்.
இதற்கு முன்னர் வக்கார் யூனிஸ் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 3 தடவைகள் 5 விக்கட் பெறுதிகளை தொடர்ச்சியாக எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.