இலங்கை போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையீடு செய்கின்றமைக்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறலை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறும் பட்சத்தில் அது தொடர்பாக சர்வதேசம் நடவடிக்கை எடுக்கும் என ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் அண்மையில் கூறியிருந்த நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு பாராட்டு
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ரஷ்ய தூதுவர் லெவென் ஜகாரியன், சில சர்வதேச விவகாரங்களில் இலங்கை எடுத்துள்ள சமநிலையான நடுநிலையான நிலைப்பாட்டை பாராட்டியுள்ளார்.
இலங்கை போன்ற சுதந்திர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான மேற்குலகின் முயற்சிகளுக்கு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் தங்களின் உள்விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ள லெவென் ஜகாரியன், இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.