இலங்கையின் தென் பகுதியிலுள்ள புவியியல் நிலை உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியமாக உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இருப்பதனால் இலங்கையை ஒரு பெரிய விண்வெளி போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கை மையமாகவும் சுற்றுலா மையமாகவும் மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாசாவின் வெளிப்படுத்திய தகவலுக்கமைய, இலங்கையின் தெற்குப் பகுதியானது உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியத்தில் இருக்கும் தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டிருந்தது.
சுற்றுலா பயணி
பேராசிரியர் ஆதர் சி கிளார்க் முன்னர் கூறியது போல் உலகின் சிறந்த குறைந்த விலை சர்வதேச விண்வெளி துறைமுகத்தை அல்லது சர்வதேச விண்வெளி உயர்த்தியை உருவாக்க இந்த சூழ்நிலை பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆழமான அகழ்வாராய்ச்சியின் மூலம் நிலத்தடி பொக்கிஷங்களை வெளிக் கொண்டுவரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டியுள்ளார்.
விசேட அந்த பகுதிக்கு செல்லும் நபர்களுக்கு எடை குறைப்பு நிலை ஏற்படும் என்பதனால் சுகாதார சேவைகளுக்காக சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்கால வளமான முதலீட்டு வாய்ப்பை நாம் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.