Loading...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் கூறுகையில்,
கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 60 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
Loading...
எரிபொருள் விலை
இந்த இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செயற்படும். அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
மேலும், இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம், கூட்டுத்தாபனத்தில் நிலவிய வினைத்திறனின்மை மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அகற்றியமையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...