காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்துவாரப்பகுதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை
இதன்படி, காலி முகத்துவாரப் பகுதியில் யாசகர்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, யாசகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளையும் உணவையும் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்புச் சேவையாக வழங்குவதற்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.