கோடை காலத்தில் உதடுகள் வறட்சியடைவது, வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் அதிகரித்த வெப்பம் உதடுகளை வறட்சியடைய செய்வது இயல்பானது.
எனவே சில வீட்டு மருத்துவத்தின் மூலம் இதனை சரிசெய்ய முடியும். அவையாவன,
தினமும் குளித்து முடித்த பின்னர் ஒலிவ் ஓயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.
தேங்காய் எண்ணெயை
அவ்வப்போது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.
எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம் உதடுகளின் இறந்த செல்களை நீக்கி உதடுகளை பொலிவுற செய்யும்.
அன்னாசி பழச்சாறில்
அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது. திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக்க உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர உதட்டில் உள்ள சுருக்கங்கள் மறைந்து மென்மையாகும்.