தாம்பத்தியம் குறித்து சந்தேகங்கள் என பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். ஆனால், அனைத்தையும் அனைவரிடமும் எளிதாக கேட்டுவிட முடியாது, கேட்கவும் தங்குவார்கள்.
துணையாக இருந்தாலுமே கூட சில சந்தேகங்கள் கேட்டறிய தயக்கம் காட்டுவது இயல்பு தான். அந்த வகையில் செக்ஸ் குறித்து பெண்களிடம் ஆண்கள் கேட்க தயங்கும் 10 கேள்விகளும் அதற்கான பெண்களின் பதில்களும்…
கேள்வி 1 கேள்வி:
வேறு வழிகளிலான உடலுறவு பற்றிய பெண்களின் விருப்பம்? பதில்: எல்லா பெண்களுக்கும் வெவ்வேறு வகையிலான விருப்பங்கள் இருக்கும். இதற்கான ஒரு தீர்வு, அவர்களிடமே வெளிப்படியாக பிடிக்குமா? பிடிக்காதா? என கேட்டறிவது தான்.
கேள்வி 2 கேள்வி:
விரைவாக விந்து வெளிப்படுவதை எப்படி கட்டுபடுத்துவது? பதில்: விரைவாக என்பதை சரியாக குறிப்பிட முடியாது. 3 – 7 நிமிடங்களில் விந்து வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு நிலை மற்றும் உடலுறவின் வேகத்தை சார்ந்து விந்து வெளிப்படும் நேரம் வேறுபடும்.
கேள்வி 3 கேள்வி:
பெண்கள் அளவை குறித்து அக்கறை எடுத்துக் கொள்கிறார்களா? பதில்: ஆண்குறி அளவு குறித்து ஒருசிலர் அக்கறை எடுத்துக் கொள்வார்கள், ஒருசிலர் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பல ஆய்வுகளில் பெண்கள் ஆண்குறி அளவு குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்று தான் கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஆண்கள் எப்படி பெண்களை சௌகரியமாக உணர வைக்கிறார்கள் என்பதில் தான் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.
கேள்வி 4 கேள்வி:
பெண்களின் உணர்ச்சியை எப்படி அறிவது? பதில்: பெண்கள் உண்மையிலேயே உணர்ச்சி கொள்கிறார்களா? அல்லது போலியாக நடிக்கிறார்களா? என்பதை அவர்களாக கூறாமல் அறிவது மிகவும் கடினம்.
கேள்வி 5 கேள்வி:
தாம்பத்தியத்தில் பெண்களின் விருப்பம் என்ன? பதில்: இதற்கும் இது தான் என குறிப்பிட்டு பதில் கூற முடியாது. ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு வகையிலான ஆசை, விருப்பம் இருக்கலாம். இது அவரவர் துணை சார்ந்தது. அந்த பெண் பிறந்து வளர்ந்த சூழல் சார்ந்தது.
கேள்வி 6 கேள்வி:
எப்படி பெண்கள் உணர்ச்சி அடைவார்கள் என அறிவது? பதில்: உடல் ரீதியான தீண்டுதலால் தான் உணர்ச்சிகளை தூண்ட முடியும். முத்தமிடுவது, கொஞ்சி விளையாடுதல், ஃபோர்ப்ளே போன்றவை பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும்.
கேள்வி #7 கேள்வி: எந்த நிலை பெண்கள் விரும்புவார்கள்? பதில்: இந்த நிலை தான் உங்கள் தாம்பத்திய உறவை சிறக்கவும், அதிக இன்பம் அடையவும் வைக்கும் என்ற எதவும் இல்லை. அவரவர் உடல்வாகு சார்ந்து இது மாறுபடும்.
கேள்வி #8 கேள்வி: அடுத்த முறைக்கான நேர அவகாசம் என்ன? பதில்: ஒருசிலர் ஒரே இரவில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள். இதற்கான சரியான நேர இடைவேளை என்று குறிப்பிட்டு கூற முடியாது. உங்கள் உடல் மீண்டும் தயார் ஆகும் வரை நீங்கள் காத்திருக்கலாம்.
கேள்வி 9 கேள்வி:
பெண்களுக்கு பார்ன் பிடிக்குமா? பதில்: ஒரு சில ஆண்களுக்கே பார்ன் பார்ப்பது பிடிக்காது. அதே போல தான், அனைவருக்கும் அனைத்தும் பிடிக்கும், பிடிக்காது என கூற முடியாது.
கேள்வி 10 கேள்வி:
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை? பதில்: இது அவரவர் விருப்பம் மற்றும் அவரவர் வயது, வேலை, குடும்ப சூழல், உடல்நல நிலைப்பாடு குறித்து வேறுபடும். முக்கியமாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈர்ப்பு குறைய துவங்கலாம். இதை எல்லாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.