Loading...
தமிழ் சினிமாவில் எத்தனையோ அரசியல் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த எமன் அவைகளிலிருந்து தனித்து நிற்கிறான். அரசியல் அன்றைக்கும் அப்படித்தான் இன்றைக்கும் அப்படித்தான். அரசியலில் ஈடுபடனுமா உடனே எமனை போய் பாருங்க என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம்.
விஜய் ஆண்டனியின் உயரம் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவருக்கான எல்லை கோட்டை உருவாக்கிக் கொண்டு அதை தாண்டி எதுவும் செய்யாமல் அந்த வட்டத்துக்குள்ளேயே தன்னால் எப்படி ரசிகர்களை திருப்தி படுத்த முடியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.
திருநெல்வேலியில் ஆரம்பிக்கும் கதை சென்னையில் வந்து முடிகிறது. ஒருவன் செய்யும் தீமைகளுக்கான தண்டனைய அவனின் அந்த பிறவியிலேயே அனுபவித்துவிடுவான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. தாத்தாவின் ஆபரேஷனுக்காக பணமில்லாமல் கஷ்டப்படும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. பணக்கார வீட்டு பையன் ஒருவன் கார் ஓட்டி விபத்து செய்துவிடுகிறான் அந்த விபத்தை விஜய் ஆண்டனி செய்ததாக ஒப்புக் கொள்கிறார். இதற்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தாத்தாவின் உயிரை காப்பாற்ற சிறையில் தண்டனை அனுபவிக்கும் விஜய் ஆண்டனிக்கு எமன் பின் தொடர ஆரம்பிக்கிறான். விபத்து செய்ததாக ஒப்புக் கொண்டதே இவருக்கு அதுவே ஆபத்தாக வந்து முடிகிறது. படத்தில் விஜய் ஆண்டனி பேசும் ஒவ்வொரு வசனமும் திரையரங்குகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்திருக்கிறார். அரசியல் என்பது சாணக்கியனும், சகுனியும் விளையாட்ற விளையாட்டுன்னு அவனுக்கு புரிய வைக்கிறேன்னு சொல்லிட்டு இவரு போட்ற பிளான் பார்க்கும்போதே நமக்கு ஆச்சர்யமளிக்கிறது. ஒருபக்கம் விஜய் ஆண்டனியின் தோள் மீது கைபோட்டு பாராட்டுவதும், மறுபக்கம் அவருக்கு குழி தோண்டி அதில் அவரை தள்ளிவிட நினைப்பதும் அடடே அற்புதம்.
எமன் படத்தின் பெரிய பலமே வசனங்கள்தான். அது விஜய் ஆண்டனி பேசுவதாகட்டும், தியாகராஜன் பேசுவதாகட்டும் அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி மனதில் வந்து விழுகிறது.
என் மேல கைவச்சா பாடல் விஜய் ஆண்டனிக்கே உரிய ஸ்டைலில் அவர் நடனம் ஆடியிருப்பது ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ரொமான்ஸ் பாடல்தான் தேவையில்லாத ஒன்றாகவும் விஜய் ஆண்டனிக்கு செட்டாகாத பாடலாகவும் அமைந்திருக்கிறது. இருந்தாலும் குறை சொல்லும் பட்டியலில் அந்த பாடல் இல்லை.
இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் மூன்றாவது படம் எமன். இவரின் முதல் படத்திலேயே சமூகத்தின் மீதான் அக்கறையை காட்டியிருப்பார். ஆனால் இந்த எமனில் அந்த அக்கறையை அள்ளி தெளித்திருக்கிறார். இனியாவது விழித்துக் கொள் மக்களே என்று கூறத்தான் முடியும் போய் தட்டி எழுப்பிட்டு இருக்க முடியாது.
Loading...