இலங்கையில் உள்ள ஒரு பெரிய ஆடைத் தொழிற்சாலையின் உயர் அதிகாரியான பெண் ஒருவர் நிவாரண மானியப் பட்டியலில் தமது பெயர் சேர்க்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளார்.
குறித்த மேன்முறையீடு தொடர்பான தகவல்களை ஆராயும் போதே இது தெரியவந்துள்ளது. அவரது கணவரும் மரவேலை செய்யும் கடை நடத்தும் தொழிலதிபர் என்பதும், அந்த பெண் நாட்டின் முன்னணி ஆடை நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.
இதுவரை கிடைத்து வந்த சமுர்த்தி கொடுப்பனவு
குடும்ப உறுப்பினர்கள் பிரதேச செயலகத்தில் தமது முறையீட்டை சமர்ப்பித்துள்ளதுடன், உத்தியோகத்தர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்போது அந்த குடும்பத்தின் மகள் தெரிவித்த தகவலின்படி இந்த குடும்பம் மானியத்திற்கு தகுதியற்றது என தெரியவந்துள்ளது. எனினும், குடும்பத்தின் விண்ணப்பத்தில் உரிய தகவல்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை மற்றும் கணவர் வேலையில்லாதவர் என்ற தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த குடும்பம் நீண்ட காலமாக சமுர்த்தி மானியம் கூட பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.