கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக்கு உதவுகின்றன, ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என்று பிராந்தியத்தின் ஆளுநர் உக்ரைனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் தெரிவித்த சில நிமிடங்களில்
சமூக ஊடகங்களில் உள்ள காட்சிகளும் புகைப்படங்களும் கட்டடங்கள் இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
உக்ரைனின் எதிர்த்தாக்குதல் அனைத்து முனைகளிலும் முன்னேறி வருவதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“அரை மணி நேரத்திற்கு முன்பு, இரண்டு ஏவுகணைகள் கிராமடோர்ஸ்க் நகரைத் தாக்கின” என்று ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ செவ்வாய் மாலை உக்ரைனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள்-இறந்திருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை
“நாங்கள் இப்போது நகரத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்திருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை கணக்கிட வேலை செய்கிறோம். இது நகர மையம். இவை பொதுமக்கள் நிறைந்த பொது உணவு இடங்கள்.”
ரஷ்யப் படைகள் அருகிலுள்ள கிராமத்தையும் குறிவைத்துள்ளதாக கிராமடோர்ஸ்க் நகர சபை தெரிவித்துள்ளது. “அவர்கள் ஒரு உணவகத்தைத் தாக்கினர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன” என்று கவுன்சில் டெலிகிராமில் கூறியது.