Loading...
சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் மீது அசிட் வீசியதில் நோயாளி உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளியை இலக்குவைத்தே அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசிட் வீச்சை மேற்கொண்டவர் மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Loading...
வெளியான காரணம்
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணொருவருடன் தவறான தொடர்பில் இருந்தமையினால் பெண்ணின் கணவனே இவ்வாறு அசிட் வீசியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் இணைந்து பிடித்து பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading...