வாக்னர் கூலிப்படையின் தலைவர் தற்போது ஜன்னல் இல்லாத அறையில் உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபத- விளாடிமிர் புடினால் தாம் படுகொலை செய்யப்படலாம் என வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் அஞ்சி இவ்வாறு மறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வாக்னர் கூலிப்படை கிளர்ச்சி
வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியின் போது 15 ரஷ்ய விமானிகளை கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த கிளர்ச்சியை தடுத்து நிறுத்த தாமே நடவடிக்கை முன்னெடுத்ததாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புடினை பகைத்துக் கொள்வதால் ஒரு மூட்டைப் பூச்சி போல நசுக்கப்படுவீர்கள் என ப்ரிகோஜினை எச்சரித்ததாகவும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
தற்போது புடினுக்கு பயந்து நாள் ஒன்றிற்கு 50 பவுண்டுகள் கட்டணத்தில் 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜன்னல்கள் இல்லாத அறையில் பிரிகோஜின் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் அவர் மீது தேசத்திற்கு துரோகம் விளைவித்ததாக கூறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.