Loading...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தவகையில் குறித்த நிதியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவுசெலவுத் திட்ட நடவடிக்கைகளுக்கும், 200 மில்லியன் டொலர்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தினையடுத்து இலங்கைக்குப் கிடைத்த மிகப்பெரிய நிதிஉதவியாகக் கருதப்படுகின்றது.
Loading...