Loading...
யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , 37 வயதான மகேஸ்வரன் மயூரன் என்பவரும் அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் என்பவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...