இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு அவுஸ்திரேலியா ஆட்டமிழந்தது.
இந்த நிலையில், நேற்று (29.06.2023) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அலெக்ஸ் கேரி 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களில் ஆட்டமிழக்க பாட் கம்மின்ஸ் களமிறங்கினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 184 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய நாதன் லயன் 7 ஓட்டங்களிலும், ஹேசில்வுட் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் மற்றும் ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்களாக ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடிய ஸாக் கிராலி 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் அடித்து அசத்தினார். 30 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 145 ரன்கள் குவித்து வலுவாக உள்ளது. பென் டக்கெட் 62 ஓட்டங்களுடனும், ஆலி போப் 32 ஓட்டங்களுடனும் தற்போது களத்தில் உள்ளனர்.