Loading...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச்சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 7ம் திகதியளவில் இடம்பெறக்கூடும் எனக்குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப்பெற்றுக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
Loading...
சிறுபான்மை மக்களின் வாக்குகளே தமது தோல்விக்குக் காரணம் என கடந்த ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காகசிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெரும் பிரயத்தனத்தில் மஹிந்த ஈடுபட்டு வருவதாகதெரிவிக்கப்படுகின்றது.
Loading...