Loading...
அரசியலில் தொடர்ந்தும் நடுநிலை பாதைக்கு தலைமைத்துவம் வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் நேற்று(29.06.2023) இடம்பெற்ற உத்தர லங்கா சபாகயவின் சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நடுநிலை பாதையில் பயணிப்பவர்கள்
மேலும் கூறுகையில்,“ தற்போது மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் பக்கத்தில் இருக்கின்றார். தொடந்தும் நடுநிலை பாதையில் கொடியை தூக்கிக்கொண்டு பயணிக்க மகிந்த ராஜபக்சவுக்கு முடியாது.
Loading...
ஏகாதிபத்தியவாதிகளின் அழுத்தத்திற்கும், அவர்களுக்கு எதிராக உருவாகியுள்ள ஆசியாவின் பலத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, நடுநிலை பாதையில் பயணிப்பவர்கள், எங்கு செல்வது என்று தீர்மானம் எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Loading...