நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என கூறிவரும் தம்பதிகள் அவர் உடலில் இருக்கும் மச்சங்கள் குறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் தனுஷ் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், தற்போது கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் தனுஷ் பள்ளிக்கூடத்தில் படித்த போது பள்ளியில் வழங்கப்பட்ட Transfer Certificate (T.C) யில் தனுஷ்க்கு தோள் பகுதியில் மச்சம் இருக்கிறது.
மேலும், வலது முழங்கையில் வடு உள்ளது என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து, அவர்கள் சொன்ன விபரங்கள் தனுஷ் உடலில் இருக்கிறதா என அறிய, அவர் வரும் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் நிச்சயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.