Loading...
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா. டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா.
டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடந்தது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார்.
Loading...
நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் மூன்றாமிடமும் பிடித்தார். இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Loading...