இந்தியாவில் திருமணநாளான் அன்றிரவே கணவர் வீட்டிலிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுருட்டி கொண்டு மணப்பெண் ஓட்டமெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த ஷ்யாம் பாபு என்பவருக்கும் தேவரியா மாவட்டம் சரோஜினி நகரைச் சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 23-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மறுநாள் காலை, மணப்பெண்ணை எழுப்புவதற்காக மாப்பிள்ளை வீட்டார் சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் தேடியும் அவர் இல்லாததால் அறையை சோதனையிட்டுள்ளனர், அப்போது தான் பெட்டியும், ரூ.2.5 லட்சம் மதிக்கத்தக்க நகையும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
அவளுடைய போனுக்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.