Loading...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் நடுநிலையான கொள்கையை பின்பற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
Loading...
கடன் மறுசீரமைப்பு மூலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பங்களிப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்களின் வறுமையை குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தி, உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
Loading...