திருகோணமலை கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கரடி தாக்குதலுக்கு உள்ளான மூவர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கோமரங்கடவல -பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஆர் பிரதீப் சம்பத் (29), பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த சரத் திஸாநாயக்க (46) மற்றும் பக்மீகம- கூட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கே.நிமலசிறி (38) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்றபோது கரடி ஒருவரை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றைய இருவரும் அக்கரடியை தாக்க முற்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
இந்நிலையில் குறித்த கரடி மூன்று பேரையும் தாக்கி காயப்படுத்திய நிலையில் மூவரும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.