Loading...
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள கெய்னா நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைக்குள் நுழைந்துள்ளது.
Loading...
32 பேர் படுகாயம்
சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லொறி வேகமாக மோதியதை அடுத்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Loading...