Loading...
இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு ஜேர்மன் தயாராகி வருகிறது.
இதற்காக ஜேர்மனின் சன்ஃபாமின் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் பீற்றர் பூமகேவின் தலைமையிலான குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீன விவசாயம், தொழில்நுட்ப தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
காலநிலைக்காக இந்த விடயங்களைப் பயன்படுத்தும் வகையிலேயே விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை மீள் எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான அறிவை இளைஞர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள பெரும் உதவியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...