தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக கடையாற்றிய பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞனுடன் உறவு வைத்திருந்த பெண் வேலை கிடைத்தவுடன் உறவை கைவிட்டுள்ளார்.
இதனால் அவரை பழிவாங்கும் நோக்கி இளைஞன் இந்த செயலை செய்துள்ளார்.
தொகுப்பாளரான அந்த பெண்ணின் முறைப்பாட்டிற்கமைய, கைது செய்யப்பட்ட இளைஞனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னிலைபடுத்தியது.
இதனை தொடர்ந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிணையில் விடுதலை
பிலியந்தலையைச் சேர்ந்த சுனில் சந்திரசிறி என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் சந்தேக நபருடன் 2015 ஆம் ஆண்டு முதல் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் முறைப்பாடு செய்தவரை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியமர்த்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பெண்ணுடன் சந்தேகநபர் உறவைப் பேணி வந்தார். வேலை கிடைத்தவுடன், குறித்த உறவை கைவிட்டதால் மனமுடைந்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபர் கணனி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.