Loading...
உயர்கல்வி படிப்பை தொடர வட்டியில்லா கடனை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 5,000 மாணவர்களுக்கு அரசாங்கம் வட்டியில்லாக் கடன்களை வழங்கவுள்ளது.
Loading...
கடன் விண்ணப்பம் நாளை முதல் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தொழில் சார்ந்த கல்வியை பின்பற்ற விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதற்கான முழுத் திட்டத்திற்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும் நிதியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Loading...