ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.
நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும்.
இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.
ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.
அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும்.
இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும். மந்திரம் “ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம தநூகரன புவாய நமோ நம”. அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.