கம்பஹாவில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று வாயில் நாணயம் சிக்கியதில் உயிரிழந்துள்ளது.
கம்பஹா – தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் 2 வயது சகோதரன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் கையில் வைத்திருந்த நாணயக்குற்றியை குழந்தையின் வாயில் போட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது தொம்பே வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக தடயவியல் நிபுணரின் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் பெற்றுக்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.