விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், சீனாவின் லின் ஜூவும் மோதினர்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மழை குறுக்கிட்டடால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. அதன்பின் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
இறுதியில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் யு யுவானைச் சந்தித்தார். இதில் அசரென்கா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.