புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கலாம். தற்போதைய கேலக்ஸி S21 FE மாடலில் 12MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், இந்த மாடல் கேலக்ஸி S21 FE ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.
எனினும், புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. டீசரில் சாம்சங் நிறுவனம் “Faster Just Got Faster,” என்று குறிப்பிட்டு இருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதன் முன்புற டிசைன் தோற்றத்தில் கேலக்ஸி S21 FE போன்று காட்சியளிக்கிறது.
அதன்படி புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த மாடல் முற்றிலும் புதிய நேவி புளூ நிறத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ ஃபிலாட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 12MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு சென்சார், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.