Loading...
கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
Loading...
மக்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தொிவித்துள்ளது.
Loading...