சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
அதாவது நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை இருந்தால், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? ஏன்பதை தீர்மானிக்க முடியும் என கூறியுள்ளார்.
பாடசாலை விடுமுறை
இதுதொடர்பாக அவர்கள் கோட்ட கல்வி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலியா கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளுக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.