கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு கண் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கொட பொரலுகட்டிய தெற்கில் வசிக்கும் எச்.ஜி. ஹிமாலி பிரியதர்ஷினி வீரசிங்க என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் கண்ணில் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னரான சத்திரசிகிச்சையில் கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று முன்தினம் (4.07.2023) மீண்டும் கண் வைத்தியசாலை வைத்தியர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இதன்போது வைத்தியரின் உத்தரவுக்கமைய, அதே கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று (5.07.2023) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சத்திரசிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் சுயநினைவை இழந்து விஷம் கலந்து அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சத்திரசிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் விஷம் கலந்துள்ளமையே இந்த மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.